82. இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும்

இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது.உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும், இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும்.

பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350,450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். அபி அப்பா கூட ஸ்மார்ட் ராமசாமி என்ற பதிவில் இதை விளக்கியிருப்பார். சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30)ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது.ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும், அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை.

5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350, 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன்.

இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள். ( அதன் ஒரு பகுதியைப் பாருங்கள்). போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன். 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.

1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.

25 comments:

said...

//
வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350, 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.
//
அக்கா நெஜமாவா?

இங்கயே அப்ரைசல்ல எதிர்பாத்தது இல்லைனா அடுத்த வாரமே பேப்பர் போட்டுடறானுங்க!!!

நான் GULF பத்தி ஆஹா ஓஹோன்னுல்ல நினைச்சேன்.

//
வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.

இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி' என்று திரும்பப் போவதும் இல்லை.

வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.

இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.
//

said...

:-((((((

said...

//அக்கா நெஜமாவா? இங்கயே அப்ரைசல்ல எதிர்பாத்தது இல்லைனா அடுத்த வாரமே பேப்பர் போட்டுடறானுங்க!!!//
அந்த கம்பெனிகள் பெயர் வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் சம்பளத்துடன் (திர்ஹமில்) சொல்கிறேன்.கிளீன்கோ ( 350) NCE (450) MBM (550). இந்த மூன்று கம்பெனிகளில் மட்டும் பல லட்சம் தமிழர்கள் வேலை செய்கின்றனர்.

said...

// 5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது//

கலை அக்கா.. அவிங்களுக்காவது பத்து சதவீதம் ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது..ஆனா எங்களுக்கு மொத்தமா 10,000 மாசத்துக்கு இழப்பு வருது.(ஊருல அது ஒரு குடும்பத்தோட மாச செலவுக்கு சமம்).நெனச்சு பாக்கவே ரொம்ப கடுப்பாயிருக்கு..அதுவும் சில கொறஞ்ச மாதங்களிலேயே இந்த மாற்றம் வந்திருக்கு.. நீங்க சவுதில இருக்கறதுனால உங்களுக்கு கஷ்டம் புரியுது..

said...

// பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள்//

அப்பறம் இங்க நிறைய இந்தியர்கள் சாதாரண வேலையில இருக்கறதா சொல்றிங்க இல்ல.. இப்ப அந்த இடத்த ஸ்ரீலங்கா தமிழர்களும் நேப்பாளிகள்,பங்களாதேசிகள் பிடித்துக்கொண்டு ரொம்ப நாளாச்சே..?..
நம்ம ஆட்கள் இப்பெல்லாம் நல்லா படிச்சிட்டு நல்ல வேளைக்கு தான வராய்ங்க..முக்கியமா தமிழ் சகோதரர்கள்.
அதுக்கு ஊர்ல புற்றீசல் போல இஞ்சினியர்கள உண்டாக்கிட்டிருக்கிற 300 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தான்..சரிதான?..

said...

//ரசிகன் said...நம்ம ஆட்கள் இப்பெல்லாம் நல்லா படிச்சிட்டு நல்ல வேளைக்கு தான வராய்ங்க..முக்கியமா தமிழ் சகோதரர்கள்.
அதுக்கு ஊர்ல புற்றீசல் போல இஞ்சினியர்கள உண்டாக்கிட்டிருக்கிற 300 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தான்..சரிதான?..//
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதுவே மலிந்து விடும் போது 1000 திர்ஹம் சம்பளத்திற்கு இஞ்சினியர் வேலைக்கு ஆள் எடுக்க கம்பெனியில் இருக்கும் தமிழர்களே ஐடியா கொடுப்பார்கள்.

said...

வேதனையான விசயம் தான். தமிழனின் நிலைமை எங்கே போனாலும் இது தானுங்கோ..
லேசியா தமிழர்களை (வேலைக்கு வந்த ) பற்றி நானும் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்

said...

அக்கா இப்போதைக்கு தேவையான பதிவு தான் ;(

\\வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான்\\\

உண்மை தான்...ஆனா இதெல்லாம் ஊர்ல சொன்னா எவன் நம்புறன் :(

\\போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.\\

இப்போ புதுசா ஒரு கதை ஆரம்பிச்சிருக்கு...ஒருத்தன் 6 வருஷத்துக்கு மேல் இருக்க கூடாதுன்னு சட்டம் போட போறாங்களாம். ஆனால் அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஒத்துவரும்ன்னு தெரியல.!

said...

\\5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.\\

மற்ற நாடுகளின் இருக்கும் தூதரங்களை பார்க்கும் போது நம்ம நாடு கொஞ்சம் கீழ தான் இருக்கு.

ஆனா நம்ம நாட்டு மக்கள் தொகை பார்க்கும் போது வேற வழியில்ல.

said...

\\350, 450 திர்ஹம் தான் சம்பளம். \\

இந்த 350, 450தை வாங்குறதுக்கு அவனவன் வீட்டை வித்து, வட்டிக்கு கடன் வாங்கி, வெயில்ல கஷ்டப்பட்டு, இன்னும் பல கொடுமைகளை அனுபவிச்சி வீட்டு பணத்தை அனுப்புறதுக்குள்ள தாவு தீர்திரும்.

என்னத்தை சொல்லறது...எல்லாம் கடந்து போகும் நமக்கும் வீடியல் வரும் :)

said...

//TBCD said...
மலேசியா தமிழர்களை (வேலைக்கு வந்த ) பற்றி நானும் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்//
கண்டிப்பா எழுதுங்க சார். நல்ல வேலைகளுக்கு மட்டுமே இந்தியர்கள் என்ற நிலை வர வேண்டும். அதுக்கு தான் இந்த பதிவு.

said...

//கோபிநாத் said...
இந்த 350, 450தை வாங்குறதுக்கு அவனவன் வீட்டை வித்து, வட்டிக்கு கடன் வாங்கி, வெயில்ல கஷ்டப்பட்டு, இன்னும் பல கொடுமைகளை அனுபவிச்சி வீட்டு பணத்தை அனுப்புறதுக்குள்ள தாவு தீர்திரும். என்னத்தை சொல்லறது...எல்லாம் கடந்து போகும் நமக்கும் வீடியல் வரும் :)//
விடியல் வரும் வரைக் காத்திருப்போம்.

said...

மிகவும் பயனுள்ள மற்றும் புதிய தகவல்களை (எனக்கு மட்டுமாவது) உள்ளடக்கியுள்ளது. இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் விவாதித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.

said...

//கையேடு said...
மிகவும் பயனுள்ள மற்றும் புதிய தகவல்களை (எனக்கு மட்டுமாவது) உள்ளடக்கியுள்ளது. இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் விவாதித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.//
கையேடு சார், வருகைக்கு நன்றி. இன்னொரு சமயம் இதைப் பற்றி விரிவா எழுதுறேன். உங்க பதிவுகளும் நல்லா இருக்கு. உங்க அணு ஒப்பந்தம் கட்டுரை விரைவில் களவாடப் படலாம். எச்சரிக்கை.

said...

சிவா, ரசிகன், கோபி, கையேடு அனைவருக்கும் நன்றிகள்.

said...

என்னங்க இது முதல் முறையா உங்க பதிவைப் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டா இப்படி மிரட்றீங்க..

said...

நண்பருக்கு..

தாமதாகத்தான் பார்த்தேன். அதுவும் காயத்ரியின் வலைச்சரம் வழியாக.. நீங்கள் குறிப்பாக துபாயை மனதில் கொண்டு எழுதியிருந்தாலும், இது பொதுவாக வளைகுடா நாடுகள் பற்றியதே.

இந்தியாவின் முதல் பணக்காரராக அம்பானி மாறியதற்காக சந்தோஷப்படக்கூடியது அடுத்த பிறந்தநாளுக்கு பரிசாக ஒரு விமானத்தை எதிர்பார்க்கும் அவரது மணைவியாக இருக்கலாம். இந்தியன் டின்ற சொல்லிக் கொள்பவர்களுக்கு அதில் பெரிய சந்தோஷம் ஒன்றுமில்லை.

ஒரு சின்ன கணக்கு.. நான் பெரிய பொருளாதார நிபணன் இல்லை.. என்றாலும்..

நான் சவுதி வந்தபோது 133 ரியால் 1000 ரூபாவிற்கு 1 கிராம் தங்கம் = 30-35 ரியால். இடையில் நீங்கள் குறிப்பிட்ட தாழ்நிலை 73 ரியால் 1000 ரூபாவிற்கு. 1 கிராம் தங்கம் = 45-50 ரியால். தற்பொழுது நேற்றைய நிலை.. சம்பளம் என்பது நிறுவனம் தரும் நேரத்தில்தான் என்று இருக்கும் மண்ணாரன் கம்பெனிகளில் என் கம்பெனியும் ஒன்று என்பதால் நேற்றுதான பணம் அனுப்பினேன்.. 96.50 ரியால் 1000 ரூபாவிற்கு. தங்கம் 1 கிராம் 93 ரியால். இதனை வரைபடமாக போட்டுப் பாருங்கள். இதனை வளர்ச்சி என்பதா? வீக்கம் என்பதா?

உங்களது அவசியமான இப்பதிவிற்கபாராட்டுக்கள்.

டிஸ்கி: பின்னோட்டம் நீண்டு விட்டதால் வழக்கம்போல் தனிப்பதிவுதான்..

said...

//ஜமாலன் said...
உங்களது அவசியமான இப்பதிவிற்க பாராட்டுக்கள். //
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
//டிஸ்கி: பின்னோட்டம் நீண்டு விட்டதால் வழக்கம்போல் தனிப்பதிவுதான்..//
டிஸ்கினு போடரதை நானே விட்டுட்டேனே

said...

தெளிவான கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளீர்கள். நல்ல பதிவு

said...

இவ்ளோ நாள் படிக்காம உட்டிட்டேன்...நல்ல பதிவு.

said...

//ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்// வாத்தியார் மாணவனை பிரம்பால் அடிக்கும்போது ஒரு கையை பிடித்துக் கொண்டு அடிப்பாரே ... அது மாதிரியா இந்த கை விடாமல் இருப்பது?

said...

துபாய் அரசு இந்தியர்களை வேண்டாம் எனச் சொல்வதற்கு பல காரணிகள். குறைந்த ஊழியத்தில் வேலை செய்ய 1.மொரக்கோ,துருக்கி,நேபாலி எகிப்திய கூலிகள் தயாராக இருக்கிறார்கள்.
2. உடை: ஏனைய புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் வெளியே வரும்போது pant shirt ல் வரும் போது இந்தியர்கள் குறிப்பாக கேரள தமிழக கூலிகள் கைலியோடு வெளியே வருவார்கள் அதுவும் ரம்பா ஸ்டைலில் ஒரு பக்க தொடையை காட்டிக் கொண்டு அதுவும் எங்கே தெரியுமா ? sheikh zayed தெருவில்.
3.உணவு: எல்லோரும் நாகரீகமாக சிகரெட் பிடிக்கும் போது நம் ஆள் பீடியை பற்றவைத்துக் கொண்டு ஹாயாக உலா வருவார். பான் பராக்கை ஒழித்துக் கட்ட அரசு என்ன பாடு பட்டாலும் குஜராத்திலிருந்து வரும் காய்கறி படகில் கடத்தி வரப்படும் பான் பராக் வெற்றிலை இதனால் ஏற்படும் அருவருப்பான கறைகள்.
4. வெள்ளியன்று Nasser Square சதுக்கத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது.

said...

வித்யா நீங்கள் சொல்லும் விசயங்கள் எல்லாமே எல்லா அரபு நாடுகளுக்கும் பொருந்தும் என்றாலும் இந்தியர்கள் இந்த அரபுநாடுகளுக்கு வருவது ஒன்றும் குறையவில்லை.

ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர்கள் மிகவும் குறைவாக சம்பளம் கொடுக்கிறார்கள்.

குவைத் விமான நிலையத்தில் கூலிகளாக பணியாற்றுபவர்களுக்கு (பல தமிழர்களும் இதில் அடக்கம்) சம்பளமே கொடுக்கப்படுவதில்லை அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கிடைக்கும் கூலியில் ஒரு பகுதியை அந்த கம்பெனிக்கு கொடுத்துவிடவேண்டும்.

அதனாலேயே சமீபக்காலங்களின் கூலிகள் பயணிகளிடம் அடவடியாக பேசி வசூலிப்பதும் நடந்துவருகிறது. பத்தடி தூரத்திற்கு உங்களது பொருட்களை வண்டியில் வைத்து இழுத்து வர 1/4 தினார்தான் கொடுக்கவேண்டும். ஆனால் அடாவடியாக 1/2 தினார் வசூலிப்பது சகஜமாக நடக்கிறது.

உங்களின் பின்னூட்டத்தில் எழுதிய இந்த கருத்தும் உண்மையே:


நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதுவே மலிந்து விடும் போது 1000 திர்ஹம் சம்பளத்திற்கு இஞ்சினியர் வேலைக்கு ஆள் எடுக்க கம்பெனியில் இருக்கும் தமிழர்களே ஐடியா கொடுப்பார்கள்.

said...

/// தமிழ் பிரியன் said...தெளிவான கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளீர்கள். நல்ல பதிவு///
நன்றிகள் தமிழ் பிரியன்

said...

//M Poovannan said...
மஞ்சூர் ராசா said...//
நன்றிகள் சார்.